பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கமல்நாத் சீனாவிற்காக வேலை செய்பவர்: பாஜக கடும் விமர்சனம்

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் சீனாவிற்காக வேலை செய்பவர் என்று பாஜக தேசிய துணைத்தலைவர் பிரசாந்த் ஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

News image

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் சீனாவிற்காக வேலை செய்பவர் என்று பாஜக தேசிய துணைத்தலைவர் பிரசாந்த் ஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.(கோப்புப்படம்)

Updated On :26 ஜூன் 2020, 11:24 am

போபால்: மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் சீனாவிற்காக வேலை செய்பவர் என்று பாஜக தேசிய துணைத்தலைவர் பிரசாந்த் ஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளியன்று போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

காங்கிரசும் அதன் தலைமையும் சீனாவிற்கு ஆதரவாகப் பேசுவதற்கு காரணம் உள்ளது. காங்கிரசின் முந்தைய ஆட்சிகாலத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்த கமல்நாத்தான் இதற்கு முக்கிய காரணம். அவர் சீனாவிற்காக வேலை செய்பவர்.

அப்போதைய ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. குறிப்பிட்ட சில பொருட்கள் இந்தியாவிலேயே கிடைத்த போதிலும், சுமார் 250 வகை பொருள்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அவற்றிற்கு எல்லாம் குறைந்த அளவே இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இதன்மூலம் கிடைத்த பணம் எல்லாம், காங்கிரசிற்கும், ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கும் வழங்கபட்டது ஒரு குற்றமாகும். இவை அனைத்திற்கும் வர்த்தகத்துறை அமைச்சரே காரணம். இவை அனைத்திற்குமே ஆதாரம் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.