பெங்களூரு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 16 பேருக்கு கரோனா தொற்று!
பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 16 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


பெங்களூரு: பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 16 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ‘இதுவரை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 16 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 4 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நோய்தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையாக தோராயமான தேர்வின் மூலம் ஊழியர்களுக்கு தொடர்ந்துண் கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
அதேநேரம் பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் பாதிக்கப்பட்டவர்களோடு முதன்மைத் தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்தும் பணியைச் செய்து வருகிறார்கள். அத்தோடு அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளையும் வழங்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...