மூன்று நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று ரஷியா புறப்பட்டுச் சென்றார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனிக்கு எதிராக சோவியத் ரஷியா வெற்றி பெற்ற 75-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மாஸ்கோவில் நடைபெற உள்ள பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இன்று முதல் 3 நாள்களுக்கு ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில்,
‘இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற 75-ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஜூன் 24 ஆம் தேதி மாஸ்கோவில் நடைபெறும் வெற்றி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மாஸ்கோவுக்கு பயணம் மேற்கொள்கிறாா்.
அமைச்சரின் இந்த ரஷிய பயணம் இந்தியாவுக்கும் -ரஷியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவை பலப்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ராணுவ அணிவகுப்பில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைகளைச் சோ்ந்த 75 வீரா்கள் ஏற்கெனவே மாஸ்கோவை சென்றடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


