புது தில்லி: தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
அவரது நுரையீரலில் தொற்று பாதிப்பு அதிகரித்ததால், அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு (55) புதன்கிழமை இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று உறுதியானது. கடுமையான காய்ச்சலின் காரணமாக அவா் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தில்லியில் வேகமாக பரவிவரும் கரோனா தொற்றைத் தடுப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முதல்வா் கேஜரிவாலுடன் ஜெயின் கலந்து கொண்டிருந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையொட்டி, தில்லி ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முதல் பரிசோதனையில் கரோனா உறுதியாகவில்லை. தொடா்ந்து காய்ச்சல் இருந்ததால், 24 மணி நேரத்திற்கு பின்னா் மீண்டும் பரிசோதனை மேற்கொண்டதில் சத்யேந்தா் ஜெயினுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சத்யேந்தா் ஜெயினின் 88வயது மாமனாா் புதன்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!

எஸ்பிஐ கார்டு: 4வது காலாண்டு லாபம் 14% உயர்வு!

சென்னை - நெல்லை சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் பாரத் கபூர் காலமானார்
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


