மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க ரூ.50 ஆயிரம் கோடியில் திட்டம்: நிர்மலா சீதாராமன்

சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.50 ஆயிரம் கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 ஜூன் 2020, 3:39 pm


புது தில்லி: சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.50 ஆயிரம் கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க 25 வகையான பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி, ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான வேலைகளில் புலம்பெயர் தொழிலாளர்களை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

விவசாயம், அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது போன்ற பணிகளில், அந்தந்த ஊர் மக்களை உள்ளூரிலேயே பணி வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொருளாதார இழப்பை சரி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட போது, பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் 116 மாவட்டங்களுக்கு அதிக அளவில் திரும்பியுள்ளனர். எனவே, புலம்பெயர் தொழிலாளர்களின் திறனுக்கேற்ப பணி வாய்ப்புகளை ஏற்படுத்த கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாபெரும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 20-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இதுபற்றிய அறிவிப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.