லக்னௌ: உடல்நலக்குறைபாடு காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டான்டனின் உடல்நிலை தேறிவருகிறது.
மத்திய பிரதேச ஆளுநராகப் பணியாற்றி வருபவர் பாஜகவைச் சேர்ந்தவரான லால்ஜி டான்டன். இவர் கடந்த சனிக்கிழமையன்று காய்ச்சல் மற்றும் சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகளுக்காக, லக்னௌவில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போதே அவருக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டு முடிவு நெகடிவ் என்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார். அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகக் கூறப்படுகிறது.அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மேதாந்தா மருத்துவமனையின் இயக்குநர் ராகேஷ் கபூர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனைக்கு வந்து, லால்ஜி டான்டனின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


