கூகுள் தேடுபொறியில், பயனாளர்கள் தங்கள் அருகில் இருக்கும் கரோனா ஆய்வகங்களை அறிய உதவும் வகையில் புதிய டூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் (ஐசிஎம்ஆர்) ஒருங்கிணைந்து, அரசு அறிவித்த கரோனா ஆய்வகங்களின் பட்டியலை பயனாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த புதிய டூல் அமைந்துள்ளது.
இந்த புதிய வரவு தற்போது ஆங்கிலம் மற்றும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய டூலின்படி, பயனாளர்கள் 'Testing' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி தேடும் போது, பயனாளர்களின் பகுதிக்கு அருகே இருக்கும் பரிசோதனை ஆய்வகங்களின் பட்டியலும், அதன் சேவையை பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் தேடுபொறி முடிவுகளில் வெளியாகும்.
இதையும் படிக்கலாம்.. கரோனா ஆய்வு: 'ஓ' ரத்த வகை பாதுகாப்பு, 'ஏ' ரத்த வகைகள் எச்சரிக்கை
அதேப்போல கூகுள் வரைபடத்தில், பயனாளர் 'covid testing' அல்லது 'coronavirus testing' என்று தேடும்போது, பயனாளர் இருக்கும் இடத்துக்கு அருகே இருக்கும் ஆய்வகங்களின் விவரம் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகும்.
தற்போது சுமார் 300 நகரங்களில் இருக்கும் 700 பரிசோதனை ஆய்வகங்களின் பட்டியல் இந்த புதிய டூலில் இணைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் பல ஆய்வகங்களை இந்தப் பட்டியலில் இணைப்பது குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


