திருப்பதி: தேவஸ்தான ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுபாட்டின் கீழ் திருப்பதியில் உள்ள பத்து கோவில்களில் கோவிந்தராஜ சாமி பெருமாள் கோவிலும் ஒன்று. திருப்பதி வெங்கடசலபதி கோவில் உட்பட அனைத்து கோவில்களும், 80 நாட்கள் இடைவேளைக்குப் பிறகு கடந்த 8-ஆம் தேதியன்று திறக்கப்பட்டன.
இந்நிலையில் தேவஸ்தான ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக தேவஸ்தான தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, தேவஸ்தான ஊழியரான சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு கடந்த புதனன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டதோடு, அவரும் உடனடியாக கரோனா சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கோவில் இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளதோடு, கோவில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


