புது தில்லி: இந்தியாவில் நாள்தோறும் கரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளோடு ஒப்பிடும் போது, குணமடைவோர் விகிதம் உயர்ந்து வருவதாக மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புது தில்லியில் இன்று மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகக் கூடுதல் செயலாளர் லவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவில் இதுவரை கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. பொது முடக்கம் காரணமாக கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொது முடக்கம் அமல்படுத்தப்படாவிட்டால் கரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக இருந்திருக்கும்.
இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 49.21% ஆக உள்ளது. கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதே சமயம், நாட்டில் கரோனா பாதித்து உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.
தொடர்ந்து கரோனா பரிசோதனையை அதிகரிப்பது, கரோனா நோய் பரவலைக் கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் துர்கா ஸ்டாலின் படகு சவாரி!

வரப்பெற்றோம் (27-04-2026)
வெங்காயம் சூட்டைத் தணிக்குமா? சொல்கிறார் பாஜக அமைச்சர்

மே 15-ல் வெளியாகிறது இயக்குநர் சற்குணத்தின் புதிய இணையத் தொடர்!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


