பெட்டயா: கரோனா பரவலுக்கு காரணம் என்று கூறி, சீன அதிபர் ஜி சின்பிங் மீது பிகார் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிகார் மாநிலம் சம்பரான் மாவட்டம் பெட்டயாவில் உள்ள முதன்மை குற்றவியல் நீதிபதி முன்னிலையில், வழக்கறிஞர் முராத் அலி என்பவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில் சீனாவின் வுஹான் மாகணத்தில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கரோனா வைரசை உலகம் முழுவதும் பரப்பியதாக சீன அதிபர் ஜி சின்பிங் மீதும், அதன் பரவல் குறித்த குறித்த தகவலை உலகிற்குத் தெரியாமல் மறைத்ததாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் கிப்ரேசியஸ் மீதும் புகார் அளித்துள்ளார்.
அத்துடன் அவர் தனது புகாருக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இந்திய் பிரதமர் மோடியை சாட்சியாக சேர்த்துள்ளார். ஜி சின்பிங் மற்றும் கிப்ரேசியஸ் ஆகிய இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 269, 270, 271, 302, 307, 500, 504 மற்றும் 120B இன் படி நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
தனது புகாருக்கு ஆதராமாக அனைத்துவகை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வந்த செய்திகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவானது வரும் 16-ஆம் தேதியன்று விசாரணைக்கு வரவுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


