போபால்: என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங் புகார் அளித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங் பெயரில் அமைந்த ட்விட்டர் கணக்கு ஒன்றில் இருந்து சில கருத்துகள் பதியப்பட்டு இருந்தது. இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.
இந்நிலையில் என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநில சைபர் குற்றங்கள் பிரிவு காவல்துறைக்கு அவர் அளித்துள்ள புகாரில், ‘என்னுடைய பெயரில் போலி ட்விட்டர் கணக்கு ஒன்றினை உருவாக்கி , அதன் வழியாக சர்சைக்குரிய கருத்துகள் பதிவு செய்யப்படுவது என் கவனத்திற்கு வந்தது, எனவே அச்செயலில் ஈடுபட்ட நபரைக் கைது செய்வதுடன், அந்தக் கணக்கையும் உடனே முடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவத்துள்ளார்.
அத்துடன் @digvijaya28 என்ற பெயரில் செயல்படும் கணக்கு மட்டுமே தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவரின் புகாரை ஏற்று, குறிப்பிட்ட கணக்கினை நீக்குமாறு சைபர் குற்றங்கள் பிரிவு ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


