ஹைதராபாத்: தெலங்கானாவில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க, மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் திங்கள்கிழமை முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளியன்று மாநில அரசு தேர்வுகளை தள்ளி வைப்பதாக அறிவித்தது.
இந்நிலையில் மாநில கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டமானது, முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் திங்களன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தெலங்கானாவில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட உள்ளனர்.
மாநிலத்தில் இப்போதுள்ள சூழலில் தேர்வுகளை நடத்துவது சாத்தியம் இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது என்றும், மாணவர்களுக்கு பள்ளி அக மதிப்பீட்டின்படி, தேர்ச்சிப் படி நிலைகள் வழனகப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் எதுவும் இன்றி தேர்ச்சி பெறுவதாக தெலங்கானா மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


