கொச்சி: கேரளாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவது விட்டது.
கரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கேரளாவில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மாநில அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க ஸ்மார்ட் போன் இல்லாத நிலையில் மாணவி ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் கடந்த வாரத்தில் நடந்தது.
இந்நிலையில் கேரளாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, கிரிஜா என்பவர் மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், மாநிலத்தின் உள்ளடங்கிய பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் குறிப்பாக எஸ்.சி / எஸ்.டி சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு இந்த ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெறுவதற்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படாத நிலையில், இதில் பெரிய பாகுபாடு நிலவுகிறது. எனவே கேரளாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிப்பது குறித்து, மாநில அரசு மற்றும் கேரள கல்விசார் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப பிரிவிற்கு ஆலோசனை வழங்குமாறு கோரியிருந்தார்.
இந்த மனுவானது நீதிபதி டயஸ் முன்னிலையில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புகள் துவங்குவதற்கு முன்பே மாணவர்களுக்கு அதுதொடர்பான உரிய வசதிகள் செய்து கொடுகபட்டுள்ளது என்றும், ஆன்லைன் வகுப்பிற்கான பாடங்கள் மாணவர்களால் மொத்தமாக எளிதான முறையில் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து தற்போதைய சூழலில் மனுதாரரின் கோரிக்கைப்படி, கேரளாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிமதி மறுப்புத் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


