பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் நோயாளிகளுக்கு விடியோ வழியாக சிகிச்சையளிக்கும் மருத்துவர்!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும், தனது நோயாளிகளுக்கு விடியோ வழியாக சிகிச்சையளிக்கும் மருத்துவரின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :2 ஜூன் 2020, 12:04 pm

அலிகார்: உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும், தனது நோயாளிகளுக்கு விடியோ வழியாக சிகிச்சையளிக்கும் மருத்துவரின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் ஜவஹர்லால் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அலிகார் இஸ்லாமிய பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்தக் கல்லூரியின் காசநோய் மற்றும் நெஞ்சக நோய்கள் சிகிச்சைப் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் முகம்மது சமீம். இவர் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் மற்றும் இதர நெஞ்சக நோய் பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.  

இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு   அவர் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இருந்தபோதிலும் விடியோ கான்பெரன்சிங் வழியாக தனது மருத்துவமனை சக ஊழியர்களுடன் தொடர்பு கொண்டு, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் மற்றும் இதர நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதைத் தொடர்ந்து வருகிறார்.

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ‘எனது நோயாளிகளுக்கு சிகிச்சை தடையின்றித் தொடர வேண்டுமென்று விரும்புகிறேன். என்னைப் போல கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற மருத்துவர்களும் இதுபோல முறைகளை மேற்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வது சரியாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.