குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புது தில்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.

ஜாமியா பல்கலைக்கழகத்தில் இன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏராளமான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கே கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு மாணவர் காயமடைந்தார். தொடர்ந்து அந்த நபர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவாறு கூச்சலிட்டுக் கொண்டே சென்றார்.
இது அனைத்தையும், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் முன்னிலையிலேயே நடந்தது. அங்கிருந்த பலரும் மர்ம நபரின் செயலை விடியோ எடுத்தனர்.

பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், மர்ம நபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

