/

குடியரசு தின விழாவை முன்னிட்டு பெங்களூரில் பலத்த பாதுகாப்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு பெங்களூரில் உள்ள முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :25 ஜனவரி 2020, 7:58 am

குடியரசு தின விழாவை முன்னிட்டு பெங்களூரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பெங்களூரு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் பீல்ட் மார்ஷல் சாம் மானேக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகப் பெங்களூரின் தலைமைக் காவலர் பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 

குடியரசு தின விழா அமைதியாகக் கொண்டாடப்படுவதை உறுதி செய்வதற்காகவும், பாதுகாப்பை மேம்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் நகர மற்றும் மாநில காவல்துறைக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

மார்ஷல் சாம் மானேக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் நாளை கர்நாடக  ஆளுநர் வஜுபாய் வாலா தேசியக் கொடியை ஏற்ற உள்ளார்.  இந்த நிகழ்ச்சியில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. அதையொட்டி அப்பகுதியில் 150 உயர் அதிகாரிகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

கொடியேற்றும் நிகழ்ச்சியை அடுத்து இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) ஹெலிகாப்டர் மூலம் மலர்களைத் தூவிய பின்னர் தேசிய கீதம் பாடப்படும். மேலும், அணிவகுப்பு மைதானத்தைச் சுற்றி 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சியின் போது எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுப்பதற்காக வெடிகுண்டு கண்டறியும் குழுவையும் நியமித்துள்ளனர். 

அணிவகுப்பு மைதானத்திற்குச் செல்லும் சாலைகளில் நெரிசல் ஏற்படாவண்ணம் 1 கி.மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.