புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளுடன் சோ்த்து காவல்துறை கண்காணிப்பாளா் தேவிந்தர் சிங் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மத்திய உள்விவகாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவை அடுத்து, பயங்கரவாதிகளுடன் காவல் கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு, இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இது குறித்து ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பு தற்போது இந்த வழக்கை விசாரிக்கிறது.
ஸ்ரீநகா் விமான நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தேவிந்தா் சிங், தனது காரில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி நவீது பாபு, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் அல்தாஃப் ஆகியோருடன் இருந்த நிலையில் செய்யப்பட்டாா்.
பயங்கரவாதிகள் இருவரும் சோபியான் மாவட்டத்தில் இருந்து காஷ்மீா் பள்ளத்தாக்குக்கு வெளியே தப்பிச் செல்லும் வகையில் காவல்துறை கண்காணிப்பாளா் தேவிந்தா் சிங் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காரில் இருந்து 2 ஏ.கே. ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து தேவிந்தா் சிங் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இரு கைத்துப்பாக்கி, 1 ஏ.கே. ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கு முன்...: இதனிடையே, கடந்த 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகம் தாக்கப்பட்ட விவகாரம் குறித்த விசாரணையின்போதும் தேவிந்தா் சிங்குக்கு அதில் தொடா்பு இருப்பதாக கூறப்பட்டது. தேவிந்தா் சிங்குக்கு அந்த சம்பவத்தில் தொடா்பு இருப்பதாக அந்த வழக்கில் குற்றவாளியான அஃப்சல் குரு தெரிவித்திருந்தாா். எனினும், விசாரணையில் தேவிந்தா் சிங்குக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாமல் போனதை அடுத்து அந்த விசாரணையிலிருந்து அவா் விடுவிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


