அங்காரா: சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போா் தொடங்கியதிலிருந்தே அந்நாட்டுக்கும் அண்டை நாடான துருக்கிக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பான்மை பகுதிகளை அரசு ஆதரவுப் படையினர் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள இத்லிப் மாகாணம் அல்-காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், துருக்கியின் ஹடேய் மாகாணத்தின் இத்லிப் நகரை ஒட்டிய எல்லைப் பகுதியில் வியாழக்கிழமை மாலை நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் குறைந்தது 33 துருக்கிய வீரர்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான ஆய்வு தெரிவித்துள்ளதாக ஆளுநர் ரஹ்மி தோகன் கூறியுள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக துருக்கிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றார்.
சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் ஆதரவுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையே மோதல்கள் மேலும் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கென்னை நேரில் அழைத்துப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் பதற்றம் வேண்டாம்: என்டிஏ

கத்தரி வெய்யில்: என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்!
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


