சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

இலங்கையில் முதல் மின்சார ரயில் பாதை அமைக்கத் திட்டம் 

மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் நாட்டின் முதல் மின்சார ரயில் பாதையைக் கண்டியில்

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:00 pm

IANS

கொழும்பு: மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் நாட்டின் முதல் மின்சார ரயில் பாதையைக் கண்டியில் நிர்மாணிக்க இலங்கை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து மாநில போக்குவரத்து அமைச்சர் திலம் அமுனுகாமா கூறியதாவது..

ரயில் பயணத்தைச் சுலபமாக்கவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்காகத் தலைநகர் கொழும்பிலிருந்து 78 கி.மீ தூரத்தில் உள்ள ரம்புக்கனா - கண்டிக்கும் இடையே புதிய மின்சார ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. 

மேலும், இந்த திட்டம் முடிந்ததும் கண்டியின் புறநகரில் உள்ள நவல்பிட்டியாவிற்கு புதிய ரயில் பாதையை விரிவுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தற்போதுள்ள ரயில் பாதைக்கு மேலே கான்கிரீட் தூண்களைப் பயன்படுத்தி முழு திட்டமும் செயல்படுத்தப்படும். இந்தக் கட்டுமான திட்டத்தை ஸ்பெயினில் உள்ள ஒரு நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.