புது தில்லி: தில்லி வன்முறைக்காக மூன்று பாஜக தலைவர்களை கைது செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, வரும் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புது தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வெள்ளி மாலை துவங்கி நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 33 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர் உள்ளிட்ட பாஜக தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள்தான் இந்த வன்முறைக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன
இந்நிலையில் மூன்று பாஜக தலைவர்களை கைது செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, வரும் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தில்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் தில்லியில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர் மற்றும் பர்வேஸ் வர்மா ஆகிய மூவரையும் உடனடியாக கைது செய்யய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவானது வியாழனன்று நீதிபதிகள் படேல் மற்றும் ஹரிஷங்கர் ஆகிய இருவர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
அப்போது பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்று துஷார் மேத்தா கோரிக்கை வைத்ததால், அதை ஏற்று ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கென்னை நேரில் அழைத்துப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் பதற்றம் வேண்டாம்: என்டிஏ

கத்தரி வெய்யில்: என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்!
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


