மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கேரள அரசியல்வாதிகள் மற்றும் ஊடகத்துறையினரின் போன்கள் ஒட்டுக்கேட்பு: காங்கிரஸ் பரபரப்பு புகார்

கேரளத்தில் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகத்துறையினரின் போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது.

News image

ரமேஷ் சென்னிதாலா

Updated On :26 பிப்ரவரி 2020, 1:04 pm

ஆலப்புழா: கேரளத்தில் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகத்துறையினரின் போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது.

கேரளாவில் காவல்துறையினரின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் விதமாக இல்லை என்று இம்மாதத்  துவக்கத்தில் மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கை வெளியானது. இதையடுத்து ஆளும் இடதுசாரி அரசின் மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தன. குறிப்பாக எதிர்கட்சித் தலைவரான காங்கிரசின் ரமேஷ் சென்னிதாலா முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் கேரளத்தில் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகத்துறையினரின் போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் சென்னிதாலாகூறியதாவது:

கேரளாவில் காவல்துறையினரின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் விதமாக இல்லை என்ற மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அரசை விமர்சிக்கத் துவங்கியதில் இருந்து, இந்த் ஒட்டுக் கேட்பு நடைபெற்று வருகிறது. எதிர்கட்சிகள் மற்றும் ஊடகத்தினருக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தை கண்காணிக்கும் விதமாக இச்செயல் நடைபெறுகிறது. மோசமான விளைவுகளை உருவாக்குமென்பதால் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.