புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யவோ, பிரச்னைக்கு தீர்வு காண உதவவோ அமெரிக்கா தயாராக உள்ளதாக டிரம்ப் கூறினார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதம் கட்டவிழித்து விடப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து டிரம்ப் அளித்த பதிலில், இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்னை மிக நீண்ட காலமாக நெருடலான விஷயமாகவே உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண மத்தியஸ்தம் செய்யவோ அல்லது உதவவோ தாயராக இருக்கிறேன். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானும் செயலாற்றி வருகிறது. நீண்ட காலமாக மக்களின் கவனத்தில் இருக்கும் பிரச்னையாக காஷ்மீர் உள்ளது. எந்த ஒரு பிரச்னைக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். இன்றைய பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதம் குறித்து விரிவாகவேப் பேசியுள்ளோம்.
நிச்சயம் இது ஒரு பிரச்னைதான். என்னால் என்ன செய்ய முடியுமோ செய்ய நான் தயார் என்று சொல்லியிருக்கிறேன். ஏன் என்றால், இரண்டு பேருடனுமே (பிரதமர் மோடி - பாக் பிரதமர் இம்ரான் கான்) எனக்கு ஒரு நல்ல நட்புறவு இருக்கிறது என்று தெரிவித்தார்.
இந்த பேச்சின் போது பயங்கரவாதம் குறித்தோ, காஷ்மீர் விவகாரம் குறித்தோ டிரம்ப் ஒரு முறை கூட பாகிஸ்தானை விட்டுக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


