காபூல்: ஆப்கானிஸ்தானில் மேற்கு ஹெராத் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முதன்மை நீதிமன்ற நீதிபதி உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஷைடே பகுதியில் உள்ள இன்ஜில் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு தலிபான் தீவிரவாதிகள் குழு நடத்திய தாக்குதலில் நீதிபதி அப்துல் ரஹீம் அஜீமியை சுட்டுக் கொன்றதாக ஜெய்லானி ஃபர்ஹாத் மாகாண அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
நீதிபதி அஜீமி இன்ஜில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் தலைவராக பணியாற்றி வந்தவர். தலிபான் பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கப்பட்டதில் இவர் நேற்றிரவு உயிரிழந்தார்.
மேலும், தெற்கு காந்தஹார் மாகாணத்தின் தான்ட் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீஸார் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் சுதந்திர மனித உரிமைகள் ஆணையம் (ஏ.ஐ.எச்.ஆர்.சி) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2019-ல் தலிபான் பயங்கரவாதிகள் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் 2,800 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 7,950 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!

பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி! 43 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரர்; மிகப் பெரிய சாதனையை நோக்கி விராட் கோலி!
இன்றைய ராசி பலன் (28.04.2026) - கும்பம்
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


