பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பிச்சையெடுத்து ரூ.8 லட்சம் நன்கொடை அளித்த முதியவர்

விஜயவாடாவில் சாய் பாபா கோயில் பணிகளுக்காகப் பிச்சையெடுத்து முதியவர் ஒருவர் சுமார் 8 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

News image
Updated On :18 பிப்ரவரி 2020, 8:06 am

விஜயவாடாவில் சாய் பாபா கோயில் பணிகளுக்காகப் பிச்சையெடுத்து முதியவர் ஒருவர் சுமார் 8 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். 

ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் யதிரெட்டி(73). இவர் கடந்த 40 ஆண்டுகளாக ரிக்ஷா இழுத்துப் பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக அங்குள்ள கோயில்களில் பிச்சையெடுத்து வந்தார். 

இந்நிலையில், சாய்பாபா கோயில் மற்றும் கோசாலை மேம்பாட்டுக்காக சுமார் 8 லட்சம் ரூபாய் வரை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவரின் இந்த செயல், அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைப் பற்றி யதி ரெட்டி கூறுகையில், 

வயது முதிர்வு காரணமாகக் கோயில்களில் பிச்சையெடுக்கத் தொடங்கினேன். இந்நிலையில், நான் சிறுக சிறுக சேமித்து, முதலில் சுமார் 1 லட்சம் ரூபாயை கோயில் பணிக்காக காணிக்கையாக வழங்கினேன். 

பின்னர், தனக்குக் கிடைக்கின்ற அனைத்தையும் தானம் தருவதாகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். பின்னர் என் வருமானம் படிப்படியாக உயர்ந்தது. இதனால் சாய் பாபா கோயிலுக்கு நன்கொடை வழங்கியுள்ளேன் என்று முதியவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.