மீரட்டிலுள்ள சர்தானா பகுதியில் 19 வயதுச் சிறுமி மாமன் மகனால் ஞாயிற்றுக்கிழமை அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். சிறுமியின் முறை மாமனான பிரசாந்த் சவுத்ரி (25), அவரது தந்தை தரம்வீர் (55) மற்றும் சிறுமியின் தந்தை ஜெயவிந்தர் (45) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
"சனிக்கிழமையன்று, தன்யா சவுத்ரி, காரி கிராமத்தில் தனது மாமாவின் வீட்டுக்குத் தங்கச் சென்றார், அங்கு அவர் காதலித்த வந்த நபரைச் சந்திப்பதை எதிர்த்தார் பிரசாந்த். தன்யா அவர் சொல்லியதைக் கேட்காமல் கிளம்பியதால் கோபமடைந்த பிரசாந்த், தனது துப்பாக்கியிலிருந்து மூன்று தோட்டாக்களால் சராமாரியாக சுட்டார். தான்யா சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்," என்றார் சர்தானா காவல் நிலையப் பொறுப்பாளர் பூபேந்திரா சவுத்ரி.
காவல்துறையினரின் கூற்றுப்படி, ஜாட் குடும்பத்தைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தன்யா, தனது கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருந்தார், அவரது குடும்பத்தினர் அதை ஏற்கவில்லை.
தன்யா கொல்லப்பட்ட பின்னர், யாரோ ஒரு நபர் சுட்டுக் கொன்றதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறி குடும்பத்தினர் கொலையை மறைக்க முயன்றதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், போலீஸார் வீட்டை அடைந்ததும் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
"தன்யா சுட்டுக் கொல்லப்பட்ட அறையில் ரத்தக் கறைகளைத் துடைத்த பின்னரே, அவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். தடயவியல் நிபுணர்களுடன் கூறுகையில், ‘நாங்கள் அங்குச் சென்ற போது, சுவர்களில் ரத்தம் இருப்பதைக் கண்டோம். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது’ என்று மீரட் கிராமப்புற போலீஸ் சூப்பிரிடென்டண்ட் அவினாஷ் பாண்டே கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 4 வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும்? வழிமுறைகள் என்னென்ன?

மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!

பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி! 43 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரர்; மிகப் பெரிய சாதனையை நோக்கி விராட் கோலி!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


