மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

திருமண வரவேற்பில் இரைச்சல் கச்சேரி: மாரடைப்பில் மரணம் அடைந்த மாப்பிள்ளை

தெலங்கானத்தில் திருமண வரவேற்பின் போது கடும் இரைச்சலுடன் இசைக்கப்பட்ட கச்சேரியால் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

News image
Updated On :15 பிப்ரவரி 2020, 7:26 am


தெலங்கானத்தில் திருமண வரவேற்பின் போது கடும் இரைச்சலுடன் இசைக்கப்பட்ட கச்சேரியால் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

தெலங்கானம், நிஜாமாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பின் போது இசைக்கப்பட்ட கச்சேரியின் போது மாப்பிள்ளை கணேஷுக்கு (25) உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருமண வரவேற்பு முடிந்து, திருமணம் நடந்த பிறகு, வெள்ளிக்கிழமை திடீரென கணேஷ் மயக்கமடைந்து விழுந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கணேஷின் பெற்றோர் கூறுகையில், திருமண வரவேற்பின் போது இசைக்கப்பட்ட கச்சேரியினால் அவரது உடல் நலன் பாதிக்கப்பட்டதாகவும், அதன் பிறகுதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இசைக் கச்சேரியால் இளம் மாப்பிள்ளை மரணம் அடைந்திருப்பது உறவினர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.