கொல்கத்தா: புல்வாமாவில் நினைவுச் சின்னம் தேவை இல்லை என்று மார்க்சிஸ்ட் தலைவர் முகமது சலீம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து, ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த கண்டனங்களை எழுப்பியது. அந்த கோர சம்பவத்தின் முதலாவது ஆண்டு நினைவு நாள் வெள்ளியன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் புல்வாமாவில் நினைவுச் சின்னம் தேவை இல்லை என்று மார்க்சிஸ்ட் தலைவர் முகமது சலீம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நமது திறமையின்மையை நினைவு கூர்வதற்காக புல்வாமாவில் நமக்கு நினைவுச் சின்னம் தேவை இல்லை. நமக்குத் தெரிய வேண்டியது எல்லாம், எப்படி 80 கிலோ ஆர் டி.எக்ஸ் வெடிபொருளானது சர்வதேச எல்லைகளைக் கடந்து, உலகில் அதிக அளவு ராணுவ மயமாக்கப்பட்ட ஒரு பகுதிக்குள் நுழைந்து வெடிக்கச் செய்யப்பட்டது என்பதுதான். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


