பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கல்லூரி விடுதியில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை: அதிர்ச்சியூட்டும் சம்பவம்

குஜராத் மாநிலத்தில் கல்லூரி விடுதி ஒன்றில் கண்ணியமற்ற முறையில் பெண்களுக்கு நடத்தப்பட்ட மாதவிடாய் சோதனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2020, 1:04 pm

புஜ்: குஜராத் மாநிலத்தில் கல்லூரி விடுதி ஒன்றில் கண்ணியமற்ற முறையில் பெண்களுக்கு நடத்தப்பட்ட மாதவிடாய் சோதனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் புஜ் மாவட்டத்தில் ஸ்ரீ சஹஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் கல்லூரியில் பயிலும் பெண்கள் தங்கியிருக்கின்றனர். அந்த விடுதியில் சமீபத்தில் பெண்கள் யார் மாதவிடாய் காலத்தில் இருக்கிறார்கள் என்பது குறித்து எழுந்த விவகாரம் ஒன்றில், அங்கு தங்கியிருக்கும் 68 பெண்களுக்கும் அவர்களது உள்ளாடைகளை நீக்கி சோதனைநடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து  இதுதொடர்பாக மாணவியர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் கல்லுரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் மாணவி ஒருவர் கூறுகையில், 'நாங்கள் எங்களது கல்வி நிறுவனத்தை மதிக்கிறோம். ஆனால் அவர்கள் நடந்து கண்ட விதம் சரியானதல்ல. அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் போதிய கவனம் பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இதை ஊடக கவனத்திற்கு கொண்டு வந்தோம். கல்லூரி முதலவர் மற்றும் வேறு சிலர் எங்களை மிரட்டினார்கள். அன்று எதுவும் நடைபெறவில்லை என்று எழுதிக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்' என்று தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளித்த கல்லூரி முதல்வர் தர்ஷனா தோலகியா, 'இந்த சம்பவம் விடுதி தொடர்பானது. கல்லூரியில் எதுவும் நடைபெறவில்லை. அந்த பெண்களின் சம்மதம் இல்லாமல் எதுவும் நடைபெறவில்லை; யாரும் அவர்களைத் தொடவும் இல்லை. நடந்த சம்பவங்கள் குறித்து தீர விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.