மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

யோகிக்கு எதிராக பயங்கரவாத அச்சுறுத்தல்

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது கோரக்பூரிலுள்ள கோரக்நாத் கோவிலில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவது குறித்து உளவுப்பிரிவு, உத்தரப் பிரதேச காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :13 பிப்ரவரி 2020, 10:36 am

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கோரக்பூரிலுள்ள கோரக்நாத் கோவிலில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவது குறித்து உளவுப்பிரிவு, காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உளவுத்துறை தகவல்களின்படி, பத்திரிகையாளர் என்ற போர்வையில் பயங்கரவாதி இக்கோயிலுக்குள் நுழைவதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, கோரக்நாத் கோயிலின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோரக்பூர் காவல்துறையினர் உள்ளூர் பத்திரிகையாளர்களின் நற்சான்றிதழ்களை முறையாக ஆராய்ந்த பின்னர், புதிய புகைப்பட அடையாள அட்டைகளை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

லக்னோவில், யோகி ஆதித்யநாத் பாதுகாப்பு நலன் கருதி, பத்திரிகையாளர்களிடமிருந்து சற்று இடைவெளியில் இருப்பார். ஆனால் கோரக்பூரிலுள்ள ஊடகங்கள் அவரை எளிதில் அணுக முடியும். அவர் கோரக்பூர் பயணத்தில் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 'ஜனதா தர்பாரில்' உள்ளூர் மக்களையும் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.