மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மின் கட்டணம் கட்டாததால் மாயாவதியின் வீட்டில் மின்சார இணைப்பு துண்டிப்பு

மின் கட்டணம் கட்டாததால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் வீட்டில் இன்று மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்துள்ளனர்.

News image
Updated On :12 பிப்ரவரி 2020, 10:28 am


லக்னௌ: மின் கட்டணம் கட்டாததால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் வீட்டில் இன்று மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்துள்ளனர்.

கிரேட்டர் நொய்டாவின் பதல்பூர் பகுதியில் உள்ள மாயாவதியின் வீட்டில் இன்று காலை மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

ரூ.67 ஆயிரம் மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருந்ததால், மாயாவதியின் வீட்டுக்கு மின் இணைப்பைத் துண்டித்துவிட்டதாக மின்சாரத் துறை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

உடனடியாக, மாயாவதியின் குடும்பத்தினர் ரூ.50 ஆயிரத்தை செலுத்தியதால், அவரது வீட்டுக்கு மீண்டும் மின் இணைப்புக் கொடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. எங்கெல்லாம் மின் கட்டணம் நிலுவையில் உள்ளதோ அந்த வீடு மற்றும் நிறுவனங்களில் மின் இணைப்பைத் துண்டிக்கும் பணியை மின் வாரிய ஊழியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படிதான், மாயாவதியின் வீட்டிலும் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. பணம் செலுத்தப்பட்டதை அடுத்து, மின் இணைப்பு வழங்கப்பட்டது என்று மின்வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.