பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சிறைக்கைதிகள் வாக்களிக்க உரிமை கோரிய மனு: தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

நாடு முழுவதும் உள்ள சிறைக்கைதிகளுக்கு தேர்தலில் வாக்களிக்க உரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தவிட்டுள்ளது.

News image

தில்லி உயர் நீதிமன்றம்

Updated On :12 பிப்ரவரி 2020, 11:04 am

புது தில்லி: நாடு முழுவதும் உள்ள சிறைக்கைதிகளுக்கு தேர்தலில் வாக்களிக்க உரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தவிட்டுள்ளது.

தில்லியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரவீன் குமார் சவுத்ரி, அதுல் குமார் துபே மற்றும் பிரேர்னா சிங் ஆகிய மூவரும் தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். மனுவில் அவர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 62 (5)   சிறையில் உள்ள கைதிகளின் வாக்களிக்கும் உரிமையை மறுப்பதாகவும், கைதிகளுக்கான வாக்களிக்கும் அடிப்படை உரிமையை இப்பிரிவு மீறுவதால் இது அரசியல் சாசனப் படி செல்லுமா என்பது குறித்து கேள்வி எழுப்பி இருந்ததுடன்,  சிறைக்கைதிகளுக்கு தேர்தலில் வாக்களிக்க உரிமை வேண்டும் என்றும் அவர்கள் கோரி இருந்தனர்.

இந்த மனுவானது தலைமை நீதிபதி படேல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ளதைச் சுட்டிக் காட்டி, அவற்றின்படி வாக்களிக்கும் உரிமை என்பது மக்களுக்கு சட்டப்படி உருவாக்கப்பட்ட ஒரு  அமைப்பால் வழங்கப்பட்ட உரிமையே அன்றி, அது அடிப்படை உரிமையில் வராது என்று தெரிவித்தனர்.

எனவே முன்னர் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த மனுவை அவர்கள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.