/

4.9 கிலோ போதை மருந்து பறிமுதல்: கடத்தியவரைப் பிடித்த போலீஸார்

டார்ஜிலிங்கில் கோஷ்புகூர் பகுதியில் சனிக்கிழமை அன்று ஒருவரை போலீஸார் கைது செய்து கோடி ரூபாய் மதிப்புள்ள 4.9 கிலோ பிரவுன் ஷுகரைப் பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:47 pm

ANI

டார்ஜிலிங்கில் கோஷ்புகூர் பகுதியில் சனிக்கிழமை அன்று ஒருவரை போலீஸார் கைது செய்து கோடி ரூபாய் மதிப்புள்ள 4.9 கிலோ பிரவுன் ஷுகரைப் பறிமுதல் செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் 35 வயது முகமது ஆசிக் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Story image

பசிதேவா காவல் நிலைய அதிகாரி சுஜித் லாமா கூறியது: "தகவலின் அடிப்படையில் போலீஸ் குழுவினர் கோஷ்புகூர் அருகே ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது சுமார் 4.9 கிலோ பிரவுன் ஷுகரை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதை மருந்து கொல்கத்தாவுக்கு கடத்தப்பட்டது."

என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை சிலிகுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.