மும்பை: இண்டிகோ விமானத்தில் என்னால் பயணிக்க இயலாது என்று பிரபல ஸ்டான்ட் அப் காமெடியன் குணால் கம்ராவிற்கு ஆதரவாக பிரபல பாலிவுட் இயக்குநர் எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளார்.
பிரபல ஸ்டான்ட் அப் காமெடியன் குணால் கம்ரா சில நாட்களுக்கு முன்னதாக மும்பையில் இருந்து லக்னௌவிற்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருடன் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியரும், வலதுசாரி ஆதரவாளருமான அர்னாப் கோஸ்வாமியும் பயணித்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ ஒன்றை ட்விட்டரில் குணால் கம்ரா வெளியிட்டார். அதில், அர்னாப் கோஸ்வாமியிடம் குணால் பல கேள்விகளை கேட்டுள்ளார். அர்னாப் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்க நீங்கள் கோழையா? இல்லை தேசியவாதியா? எனவும் பலவாறு குணால் கேள்வி எழுப்புகிறார்.
அந்த வீடியோ ட்விட்டரில் வைரலான நிலையில் இண்டிகோ நிறுவனம் குணால் கம்ராவிற்கு 6 மாதங்களுக்கு தங்களின் விமான சேவையில் பறக்க தடை விதித்தது. இண்டிகோவை போன்று, ஏர் இந்தியா, கோ ஏர் மற்றும் ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட நிறுவனங்களும் 6 மாதங்கள் வரை குணால் கம்ரா தங்களது விமானங்களில் பறப்பதற்கு தடை விதித்துள்ளது.
இந்த தடை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதை எதிர்த்து குணால் கம்ரா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் இண்டிகோ விமானத்தில் என்னால் பயணிக்க இயலாது என்று பிரபல ஸ்டான்ட் அப் காமெடியன் குணால் கம்ராவிற்கு ஆதரவாக பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளார்.
அனுராக் காஷ்யப் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக திங்களன்று கொல்கத்தா வந்துள்ளார். அப்போது அவருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இண்டிகோ விமானத்தில் டிக்கெட் பதிவு செய்துள்ளார்கள். இதுதொடர்பாக அவரிடம் தகவல் தெரிவித்த போது, 'நான் இண்டிகோ விமானத்தில் பயணிக்க இயலாது. குணால் கம்ராவிற்கு விதிக்கப்பட்ட தடை எனக்கு ஏற்புடையதல்ல; அது மிகவும் அநீதியானது என்று நான் கருதுகிறேன். அதுதொடர்பாக நான் செய்வதற்கு பெரிய அளவிற்கு எதுவும் இல்லை என்றாலும் எனது எதிர்ப்பை பதிவு செய்ய விரும்புகிறேன். எனவேதான் அவ்வாறு தெரிவித்தேன். அதற்குப் பதிலாக நான் விஸ்தாரா நிறுவன விமானத்தில் பயணிக்கும் நிலை. இதனால் நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கிளம்ப வேண்டும் என்று தெரிவித்தார்கள். ஆனாலும் நான் எனது முடிவில் உறுதியாக இருந்தேன்.
இவ்வாறு ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ள அனுராக், இதைத் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


