பனாஜி: அம்பேத்கரே தலித்துகளுக்கு தனிநாட்டினை உருவாக்க விரும்பினார் என்று கோவா மாநில துணை முதல்வர் மனோகர் அஜ்கோன்கர் தெரிவித்துள்ளார்.
கோவா மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் திங்களன்று துவங்கியது. முதல்நாளான இன்று குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்து ஆளும் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, கோவா மாநில துணை முதல்வர் மனோகர் அஜ்கோன்கர் பேசியதாவது:
உங்கள் அனைவருக்கும் தெரியும், பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட சமயத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் அங்கு சென்றனர். அது ஒரு இஸ்லாமிய நாடாக உருவானது. அதேநேரம் இந்தியா ஒரு இந்து தேசமாக உருமாறும் என்று அனைவரும் கூறினார். இந்துக்கள் என்றால் அது கத்தோலிக்கர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் என அனைத்து சமுதாயத்தினரையும் உள்ளடக்கியதுதான்.
பாபா சாஹேப் அம்பேத்கரே கூட தலித்துகளுக்கு தனிநாட்டினை உருவாக்க விரும்பினார். ஆனால் நாம் ஓற்றுமையாக இருந்து விட்டோம். இந்த சட்டத்தின் மூலம் யாருடைய குடியுரிமையையும் பறிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைத்ததில்லை. எனவே சிறுபாண்மையினர் யாரும் அச்சப்படத் தேவையில்ல்லை.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


