வாக்களிக்க வரும் வாக்காளர்களை தங்களது வாகனங்களில் வாக்குப்பதிவு மையத்துக்கு அழைத்து வந்து விடும் அரசியல் கட்சிகள், அதில் வருவோரிடம் தங்கள் கட்சிக்கே வாக்களிக்குமாறு வலியுறுத்துவார்கள். ஆனால் அந்த நடைமுறையே மிகவும் தவறானது என்று அறிவிக்கப்பட்டு அதற்கு சட்டம் தடை விதித்தது.
ஆனால், தற்போதைய தேர்தல் முறைகேடுகள் அதைவிட மிக மோசமான பழக்கவழக்கங்களால் சீரழிந்து கொண்டிருக்கிறது. பல தேர்தல்களில் புதிய புதிய முறைகேடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
அதில் ஒன்றுதான் இது..
மகாராஷ்டிர மாநிலத்தில் கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவி ஒன்று வெளிப்படையாக ஏலம்விடப்பட்டுள்ளது. அந்த ஏலத்தில் ரூ.2.05 கோடிக்கு ஏலம் எடுத்தவர் கிராமத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாசிக் மாவட்டம் தேவ்லால் தாலுகாவுக்கு உள்பட கிராமத்தில் இருக்கும் கோயிலை புனரமைத்து, அதனை பராமரிக்க ரூ.2.05 கோடியை செலவிடுவதாக அறிவித்த விஸ்வாஸ்ராவ் தேவாரே கிராமத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்கலாமே.. கரோனாவுக்கு முடிவில்லை; கரோனாவே முடிவுமல்ல
இதன் மூலம், உம்ரானே என்ற அந்த கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் விஷ்வாஸ்ராவ் பணத்தை முதலீடு செய்துள்ளார் என்றே கூறலாம்.
ஒரு கிராமப் பஞ்சாயத் தலைவர் பதவியை இவ்வளவு விலைக்கு ஏலம் எடுத்திருப்பது இதுவே முதல்முறையாக இருக்கும்.
ஆனால் இந்த ஏலத்தின் ஆரம்பத் தொகை ரூ.1.11 கோடிதான். கிட்டத்தட்ட இரண்டு மடங்குத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ஜனநாயகத்தின் மிக மோசமான நடைமுறை என்று விமரிசித்துள்ளார்.
நாம் வாழ்வது ஜனநாயக நாடு. அதில் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஏலம் விடக் கூடாது. வெட்டவெளிச்சத்தில் நடத்தப்பட்ட ஜனநாயகப் படுகொலை. இப்படி எல்லாப் பதவிகளும் ஏலம் விடப்பட்டால் யார் வேண்டுமானாலும் எம்எல்ஏ, எம்பி ஆகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மகாராஷ்டிர மாநில தேர்தல் ஆணையம், 14,234 கிராம பஞ்சாயத்துகளுக்கு ஜனவரி 15-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், ஜனவரி 18ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு அறைகளுக்கு சீல்

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

கரூா் மாவட்டத்தில் 92.65% வாக்குப்பதிவு

அமராவதி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


