மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

மது அருந்தமாட்டோம்: டிச. 21-ல் உறுதிமொழி ஏற்கும் பிகார் காவலர்கள்

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான காவலர்கள், மது அருந்தமாட்டோம் என்று டிசம்பர் 21-ம் தேதி உறுதிமொழி ஏற்கவுள்ளனர்.

News image
மது அருந்தமாட்டோம்: டிச. 21-ல் உறுதிமொழி ஏற்கும் பிகார் காவலர்கள்
Updated On :27 ஜனவரி 2024, 6:09 pm

ENS


பாட்னா: பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான காவலர்கள், மது அருந்தமாட்டோம் என்று டிசம்பர் 21-ம் தேதி உறுதிமொழி ஏற்கவுள்ளனர்.

பிகார் மாநிலத்தில் மதுபானத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் மாநில அரசு பிறப்பித்த உத்தரவின்படி, அந்த மாநில காவலர்கள் இவ்வாறு உறுதிமொழியேற்க உள்ளனர்.

பிகார் மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி நிதிஷ் குமார் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலையில், அந்த சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் தற்போது புதிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதாவது,  முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பிகார் மாநில காவல்துறை அதிகாரிகள் முதல், தலைமைக் காவலர்கள் வரை அனைவரும் மது அருந்த மாட்டோம் என்று உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, அது குறித்த அறிவிப்பு காவல்துறை டிஜிபி மூலம் அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிகாரில் 77,000 காவலர்கள், டிசம்பர் 21-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு அவரவர் பணியாற்றும் காவல்நிலையங்களில், மது அருந்த மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்கவிருக்கிறார்கள்.

பிகாரில் மதுவிலக்கு சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும் கூட, மது அருந்துதல் மற்றும் மது விற்பனை தொடர்பான சம்பவங்களில் காவல்துறையினரும் ஈடுபடுவது தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவாகி வருகிறது. இதனைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.