/

தனிமைப்படுத்திக் கொண்டார் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா

கரோனா வைரஸ் தொற்று காரணமாக எம்.பி சீனிவாஸ் பிரசாத்தை சமீபத்தில் சந்தித்த முதல்வர் பி.எஸ் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

News image
Covid-19: MP BY Vijayendra home quarantined
Updated On :27 ஜனவரி 2024, 5:09 pm

UNI

கரோனா வைரஸ் தொற்று காரணமாக எம்.பி சீனிவாஸ் பிரசாத்தை சமீபத்தில் சந்தித்த முதல்வர் பி.எஸ் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

மேலும் அவர் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், 

பிரசாத் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். நான் அவருடன் தொடர்பில் இருந்ததால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன். தற்போது வீட்டு தனிமையில் இருக்கிறேன். 

என்னுடன் இருந்த அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, தனது தந்தையும், கா்நாடக முதல்வருமான பி.எஸ் எடியூரப்பா கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், இந்த மாத தொடக்கத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தேன். தற்போது மீண்டும் வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.