/

புதுவையில் புதிதாக 302 பேருக்கு கரோனா தொற்று: அமைச்சர்

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 302 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
302 new COVID-19 positive cases, four deaths reported in UT since last 24 hrs : Minister
Updated On :27 ஜனவரி 2024, 5:08 pm

UNI

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 302 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கூறுகையில், 

ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,088 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. அதில் 302 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. அவற்றில் 299 பேர் புதுச்சேரியிலும், மூன்று பேர் யாணத்திலும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 184 பேர் வெளியேற்றப்பட்டனர். மேலும் 1,596 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,692 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலில் சிகிச்சை பெற்று வருவகின்றனர். 

புதுவையில் தொற்றுக்கு இதுவரை 8,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,627 பேர் சிகிச்சை பெற்று வெளியேற்றப்பட்டனர். 114 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.