/

தெலங்கானாவில் ஒரே நாளில் 1,931 பேருக்கு கரோனா: மேலும் 11 பேர் பலி

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,931 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image
Telangana reports 1,931 COVID-19 positive cases, 11 deaths till Wednesday night
Updated On :27 ஜனவரி 2024, 5:07 pm

UNI

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,931 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானா மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. 

இது தொடர்பாக வியாழக்கிழமை தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 

புதிதாக 1,931 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 86,475-ஆக அதிகரித்துள்ளது. 22,736 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 1,780 பேர் குணமடைந்துள்ள நிலையில், நோயிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 63,074-ஆக உள்ளது. புதிதாக 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 665-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 6,89,150 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.