/

எனது தந்தை உயிருடன் உள்ளார்: பிரணாப் முகர்ஜியின் மகன்

எனது தந்தை உயிருடன்தான் உள்ளார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜீத் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
எனது தந்தை உயிருடன் உள்ளார்: பிரணாப் முகர்ஜியின் மகன்
Updated On :27 ஜனவரி 2024, 5:07 pm

UNI


புது தில்லி: எனது தந்தை உயிருடன்தான் உள்ளார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜீத் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து வெளியாகும் போலி செய்திகளையும், சுட்டுரையில் டிரெண்ட் ஆன வார்த்தைகளையும் மறுத்திருக்கும் அபிஜீத் முகர்ஜி, வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

"எனது தந்தை பிரணாப் முகர்ஜி உயிருடன் உள்ளார் மற்றும் ரத்த ஓட்டம் சீராக உள்ளது. சமூக ஊடகங்களில் முன்னணி ஊடகவியலாளர்களால் பரப்பப்படும் ஊக மற்றும் போலி செய்திகள் மூலம், இந்தியா போலி செய்திகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறிவிட்டது என்பதையே காட்டுகிறது" என்றும் அபிஜீத் முகர்ஜி சுட்டுரையில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அவர் கோமா நிலையில் செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்தா முகர்ஜி தனது சுட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது, எனது தந்தை குறித்து வெளியாகும் போலி செய்திகளை நம்ப வேண்டாம், குறிப்பாக ஊடகங்கள் எனக்கு செல்லிடப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு இது பற்றி கேட்க வேண்டாம், ஏன் என்றால், மருத்துவமனையில் இருந்து எனக்கு அழைப்பு வரும் என்பதற்காக எனது செல்லிடப்பேசியை எப்போதும் தொடர்பு கொள்ளும் வகையில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

84 வயதாகும் பிரணாப் முகா்ஜி, மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்காக, தில்லி ராணுவ மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அறுவை சிகிச்சைக்கு முன், அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, அவருக்கு ரத்தக் கட்டியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.