மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ராமர் கோயில் பூமி பூஜையில் உமா பாரதி பங்கேற்கப்போவதில்லை

அயோத்தியாவில் நடைபெறும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பாஜக தேசிய துணைத் தலைவர் உமா பாரதி பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ராமர்கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் உமா பாரதி பங்கேற்கவில்லை

Updated On :3 ஆகஸ்ட் 2020, 6:21 am


போபால்: அயோத்தியாவில் நடைபெறும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பாஜக தேசிய துணைத் தலைவர் உமா பாரதி பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர்ஜென்ம பூமியில் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் ராமர் கோயில் பூமி பூஜையில் தான் பங்கேற்கப்போவதில்லை என்று உமா பாரதி தெரிவித்துள்ளார்.  மேலும், நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு வேறொரு நாளில் பூமி பூஜை நடந்த இடத்துக்குச் செல்லவிருப்பதாகவும், கரோனா தொற்றுப் பரவல் காரணமாகவே தான் இந்த நிகழ்ச்சியை தவிர்த்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரப்பிரதேச பாஜக தலைவர்கள் பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற செய்தியை கேட்டது முதலே நான் பூமி பூஜையில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அயோத்தியாவில் உள்ள மக்களின் நலன் குறித்து கவலை அடைந்தேன் என்று உமா பாரதி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க விருக்கிறாா்.

இந்நிலையில், ராமா் கோயில் கட்டுமானப்பணிக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து புனித மண் மற்றும் ஆற்றுநீா் விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.