ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கோவாவிலிருந்து கடத்தப்பட்ட 5,000 லிட்டர் எரிசாராயம் கேரளாவில் பறிமுதல்

கோவாவிலிருந்து கடத்தப்பட்ட 5,000 லிட்டர் எரிசாராயம் கேரளாவில்  வியாழனன்று பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :30 ஏப்ரல் 2020, 11:54 am

கொச்சி: கோவாவிலிருந்து கடத்தப்பட்ட 5,000 லிட்டர் எரிசாராயம் கேரளாவில்  வியாழனன்று பறிமுதல் செய்யப்பட்டது.

கோவாவிலிருந்து கடத்தப்பட்ட 5,000 லிட்டர் எரிசாராயம் கேரளாவில்  கொச்சிக்கு அருகேயுள்ள அலுவா என்னும் இடத்தில் கேரள காவல்துறையினரால் வியாழனன்று பறிமுதல் செய்யப்பட்டது.

சிலநாட்களுக்கு முன்னதாக கொச்சி அருகேயுள்ள காலடி என்னும் இடத்தில் கள்ளச்சாரயத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதுதொடர்பாக நடத்திய விசாரணையின் முடிவில் அலுவாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிசாராயத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர், இங்கிருந்த எரிசாரயமே அவர்கள் கள்ளச்சாராயம் தயாரிக்க மூலப்பொருளாக பயன்பட்டதும் தெரியவந்தது.

கோவாவில் இருந்து சானிட்டைசர் தயாரிப்பதற்குத் தேவையென்று  மருத்துவ நிறுவனம் ஒன்றின்  பெயரில் இரண்டு லாரி லோடுகளில் எரிசாராயம் கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள மற்றொரு லோடு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரனை நடத்தி வருகிறது.

கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கேரளாவில் காவல்துறையினர் மற்றும் கலால் துறையினர் இணைந்து இத்தகைய சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு சாராயம் பறிமுதல் செய்வது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.