கொல்கத்தா: மேற்கு வங்க அரசை ஆவிகளா நடத்துகிறது? என்று மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால் மரணமடைபவர்கள் குறித்த விபரங்களை பரிசோதித்து உறுதி செய்ய குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக்குழுவின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்கள் சிலர் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே அதுதொடர்பாக புதனன்று செய்தியாளர்கள் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது மம்தா, அந்தக் குழுவைத் தான் உருவாக்கவில்லை என்றும் அந்தக் குழுவில் உறுப்பினர்கள் யார் என்பது பற்றித் தனக்குத் தெரியாது என்றும் பதிலளித்தார். இதுகுறித்து தகவல் தெரிவிக்க தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதரத்துறைச் செயலாளர் ஆகிய இருவரும்தான் சரியானவர்கள்’ என்றும் பதிலளித்தார்.
இந்நிலையில் மேற்கு வங்க அரசை ஆவிகளா நடத்துகிறது? என்று மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது
மருத்துவக்குழு தொடர்பாக முதல்வர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். யார் யாரெல்லாம் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளர்கள் என்பது கூட தனக்குத் தெரியாது என்று முதல்வர் கூறுகிறார். அப்படியென்றால் மேற்கு வங்க அரசை நடத்துவது யார்? ஒருவேளை ஆவிகள்தான் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் முதல்வர் இப்படி பதில் கூறியிருக்க மாட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


