கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கைச்சுத்த திரவத்தைக் குடித்து கரோனா நோயாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் பணியாற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது சொந்த ஊருக்கு நடந்து செல்லும் வழியில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த இருநாட்களுக்கு முன் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவர் ஏன் இந்த வழியில் வந்தார் என்பது குறித்து விசாரித்த காவல்துறையினர், அவருக்கு கரோனா தொற்று உள்ளதா என்பது குறித்து சோதிப்பதற்காக ஏற்பாடு செய்தனர். சோதனை முடிவில் அவருக்குத் தொற்று உறுதியானதால், வியாழனன்று காலை அவர் கான்பூர் தேஹட் பகுதியில் உள்ள சர்சால் தனிமைப்படுத்துதல் மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு சேர்ந்த சிறிது நேரத்திலேயே அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த கைச்சுத்த திரவத்தைக் எடுத்துக் குடித்து விட்டார். இதன்காரணமாக அவர் உடனடியாக அருகில் உள்ள ஹெல்லேட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் அபாய கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் மவுரியா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

27.4.1976: தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


