பெங்களூரு: மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை, கரோனா பரிசோதனை பணியில் ரோபோக்களை ஈடுபடுத்தியுள்ளது.
மருத்துவமனை வாயிலில் இரண்டு ரோபோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை மருத்துவமனைக்கு வருவோருக்கு கரோனா பரிசோதனை செய்கின்றன.
மித்ரா என்றழைக்கப்படும் இரண்டு ரோபோக்கள், மருத்துவமனை வாயிலில் நிறுத்தப்பட்டுள்ளன. அவை, முகத்தை கண்டறியும் திறனுடன், மருத்துவமனைக்கு வருவோரிடம் பேசி, அவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற கரோனா அறிகுறிகள் இருக்கிறதா என்று கேட்டு, உடல் வெப்பப் பரிசோதனையையும் மேற்கொள்ளும். இதன் மூலம், நோயாளிகளை பரிசோதிக்கும்போது மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பரவுவது தடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ துணைப் பணியாளர்கள், நோயாளிகள், பார்வையாளர்கள் என அனைவரையும் இந்த ரோபோக்கள் பரிசோதனை செய்கின்றன.
உடல் வெப்ப நிலையைக் கண்டறியும் சோதனையை செய்யும் ரோபோக்கள், அவர்களிடம் சளி, இருமல் இருக்கிறதா என்று கேட்ட பிறகு, நோயாளியின் பெயர், புகைப்படம் கொண்ட அனுமதி சீட்டு வழங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


