அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

தில்லியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2003 ஆக உயர்வு

புது தில்லியில் நேற்று புதிதாக 110 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு மொத்த பாதிப்பு 2003 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2020, 5:45 am


புது தில்லி: புது தில்லியில் நேற்று புதிதாக 110 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு மொத்த பாதிப்பு 2003 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், தில்லியில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உள்ளது. அதில் 38 பேருக்கு வேறு பல உடல் உபாதைகள் இருந்துள்ளன. விரைவு பரிசோதனை கருவிகள் மூலம் சோதனை செய்யும் பணி இன்று தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிறந்து 45 நாள்களே ஆன குழந்தை, தில்லியில் கரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்த குறைந்த வயதுடைய குழந்தை இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.