குஜராத்தில் ஒரே நாளில் கரோனாவுக்கு 7 பேர் பலி
குஜராத்தில் நேற்று மாலை 6 மணி முதல் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் அந்த மாநிலத்தில் கரோனா பாதித்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்தில் நேற்று மாலை 6 மணி முதல் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் அந்த மாநிலத்தில் கரோனா பாதித்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத் மாநில நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தகவலில், குஜராத்தில் ஒரே நாளில் புதிதாக 176 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஆகமதாபாத்தில் 143 பேரும், சூரத்தில் 13 பேரும், வதோராவில் 13 பேரும் அடங்குவர்.
இதனால் குஜராத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 88 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...