கரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் கர்நாடக முன்னாள் முதல்வா் குமாரசாமியின் மகன் (நிகில்) திருமணம் இன்று மிக எளிமையான முறையில் நடைபெற்றது.
குமாரசாமியின் மகனும், நடிகருமான நிகிலின் திருமணத்தை ராம்நகா், சென்னப்பட்டணாவில் நடத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நிகிலின் திருமணம் ஆடம்பரமில்லாமல், எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நிகிலின் திருமணம் இன்று பெங்களூருவில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. அதில் இரு குடும்ப உறுப்பினா்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கரோனா பாதிப்பு முடிந்த பிறகு வேறொரு நாளில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதில் பங்கு கொள்ள உறவினா்கள், நண்பா்கள், அரசியல் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

27.4.1976: தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


