கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
அதில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாழும் மக்களில், குடும்ப அட்டை இருக்கிறதோ இல்லையோ, ஆதார் அட்டை இருக்கிறதோ இல்லையோ, யார் ஒருவருக்கு அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுகிறேதா, அவர்களுக்கு பொதுவழங்கல் துறையின் கடைகள் மூலம் பொருட்களை வழங்க வேண்டும்.
ஒரு வேளை, அவர் வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பொது வழங்கல் துறை மூலம் வழங்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

27.4.1976: தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


