இந்தியாவில் இன்றைய நிலவரப்படி ஒன்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தாலும், மறுபக்கம் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார்கள்.
நாள்தோறும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள். கரோனா பாதித்தது முதல் தனிமைப்படுத்துதல், சிகிச்சை போன்றவற்றால் மனதளவில் பாதிக்கப்பட்டு, இறுதியாக குணமடைந்து வீடு திரும்புவோருக்கு அடுத்த சிக்கல் காத்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கு உதாரணம், மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த இளைஞர், கரோனா பாதித்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டார். ஆனால், தன்னால், தனது வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனது குடும்பத்தார் நடந்து சென்ற வழியில், யாரும் நடந்து போகக் கூடாது, அப்படி போனால் அவர்களுக்கும் கரோனா வந்து விடும் என்று தங்களது அக்கம் பக்கத்தினர் கூறுவதாகவும், எங்கள் வீட்டுக்கு தினமும் பால் விநியோகித்து வந்தவரிடமும் இதுபோலக் கூறியதால் அவரும் பால் விநியோகிப்பதை நிறுத்திவிட்டார்.
நாங்கள் வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதே சிக்கலாகிவிட்டது. நாங்கள் இங்கிருந்து செல்கிறோம் என்று கலக்கத்தோடு கூறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

27.4.1976: தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


